பொழுதுபோக்கு

வடிவேலு முதன் முதலில் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

வடிவேலு இப்போது படங்களில் நடிக்க நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கில் வாங்கி கொண்டிருக்கிறார். ஆனால் ஆரம்பத்தில் இவர் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

வடிவேலு முதன் முதலில் நடித்த படம் ராஜ்கிரன் நடித்த என் ராசாவின் மனசில. இது கடந்த 1991ல் வெளிவந்தது. இதில் அவருக்கு ஆயிரமோ இரண்டாயிரமோ சம்பளமாக கிடைத்தது.

இதனை அடுத்து ஆத்தா உன் கோயிலிலே, சின்னக்கவுண்டர் போன்ற படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். அதன்பிறகு சிங்காரவேலன் படத்தில் கிட்டதட்ட படம் முழுக்க வரும் வேடத்தில் நடித்தார்.பின்னர் 1992ல் வெளிவந்த தேவர்மகன் படத்தில்தான் அழுத்தமான வேடம் கிடைத்தது. இந்த படத்திற்காக மொத்தம் 6 மாத கால்ஷீட் கொடுத்திருந்தார் வடிவேலு. இந்த படத்தின் படப்பிடிப்பின் போது வடிவேலுவுக்கு கடுமையான ஜூரமாம்.

எனவே வடிவேலுவுக்காகவே தனியாக டாக்டர்களை நியமித்து பத்திரமாக பார்த்து கொண்டார் கமல். இந்த படத்திற்காக அவருக்கு வழங்கப்பட்ட சம்பளம் 17 ஆயிரம். இதுதான் வடிவேலு முதன் முதலில் அதிகமாக வாங்கிய சம்பளமாகும்.